News August 7, 2024
கருணாநிதி நினைவிடத்தில் காங்கிரஸ் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் மரியாதை செலுத்தினர்.
Similar News
News January 16, 2026
சென்னையில் நாளை முதல் துவங்கும் சென்னை உலா

சென்னை பெருநகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மக்கள் எளிதாகக் கண்டுகளிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் “சென்னை உலா” (Hop on – Hop off) சிறப்புச் சுற்று வட்டப் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாளை (ஜன.17) முதல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணக் கட்டணம் ரூ.50 மட்டுமே ஆகும்.
News January 16, 2026
சென்னை: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு <
News January 16, 2026
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

இன்று ஜன-16 சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு. நாளை (ஜன-17) (சனிக்கிழமை) அன்று போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்ல சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு,வாலாஜா முனை, அண்ணா சாலை, அண்ணா சிலை ஸ்பென்சர் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் .


