News August 7, 2024

வினேஷ் போகத்துக்கு மோடி ஆறுதல்

image

ஒலிம்பிக்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்க பதிவில், வினேஷ் நீங்கள் சாம்பியனுக்கெல்லாம் சாம்பியன், இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பவர் என புகழ்ந்துள்ளார். இன்றைய பின்னடைவு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும் கூறியுள்ளார்.

Similar News

News October 30, 2025

ஃபைனல் செல்லுமா இந்திய மகளிர் அணி?

image

ODI மகளிர் உலகக் கோப்பையின் 2-வது அரையிறுதி போட்டி இந்தியா – ஆஸி., இடையே இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, தெ.ஆப்பிரிக்காவுடன் ஃபைனலில் விளையாடும். முன்னதாக, 1997, 2017 ஆண்டுகளில் ஆஸி.,க்கு எதிரான செமி ஃபைனல்களில் தோல்வி, வெற்றி என இந்தியா முடிவை சந்தித்துள்ளது. இதனால் இன்றைய செமி ஃபைனலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. கோப்பை வெல்லும் முனைப்பை வெளிப்படுத்துமா இந்திய மகளிர் அணி?

News October 30, 2025

வெளிநாடுகளில் ஷூட்டிங் செல்லும் மாரி செல்வராஜ்

image

தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகவே ‘D56′ இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘கர்ணன்’ படத்துக்கு பிறகு தனுஷுடன் மீண்டும் இணையும் மாரி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் அப்டேட் கொடுத்துள்ளார். மாரியின் வழக்கமான களத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 30, 2025

பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பாக்., ராணுவத்தினர் பலி

image

பாக்., – ஆப்கன் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், பாக்., ராணுவ கான்வாய் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கனை ஒட்டியுள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், கேப்டன் உள்பட 6 பாக்., ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!