News August 7, 2024
செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
நெல்லை: வெள்ள அபாய எச்சரிக்கை!

அம்பை அருகே கடனாநதி அணை நிரம்பியது. அணையின் உச்ச நீர்மட்டம் 85 அடி. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து 890 கன அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்த நிலையில், பாதுகாப்புக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. உபரி நீர் மதகுகள் வழியாகத் திறக்கப்பட்டது. இதனால் ஆழ்வார்குறிச்சி, பிரம்மதேசம் மன்னார்கோவில் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News December 18, 2025
நெல்லைக்கு சிறப்பு ரயில்.. இன்று முக்கிய அப்டேட்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நெல்லை – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06166) நெல்லையில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும். சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு ஆரம்பமாகிறது.
News December 17, 2025
நெல்லை: வரதட்சனை கொடுமை; கணவர் கைது

நெல்லையை சேர்ந்த செந்தில்முருகனின் மகளுக்கும் செந்தில்வேல் என்பவருக்கும் கடந்தாண்டு டிச.5-ல் திருமணம் நடந்தது. 10 பவுன் நகை, ரூ.10,000 ரொக்கம், பொங்கல் சீராக ரூ.50,000 பொருட்கள் கொடுத்தும் கணவன் செந்தில்வேல், தாய் லட்சுமி, சகோதரி பத்மா, மைத்துனர் முருகேஷ் ஆனந்த் ஆகியோர் பெண்ணை வரதட்சணை கேட்டு உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினர். தந்தை புகாரின் பேரில் செந்தில் வேல் -ஐ போலீசார் கைது செய்தனர் .


