News August 7, 2024

Olympics: வினேஷ் போகத் தகுதி நீக்கம்

image

உடல் எடை காரணமாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவரின் உடல் எடை, 100 கிராம் கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளதால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

Similar News

News October 20, 2025

விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

image

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை

News October 20, 2025

ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!