News August 7, 2024
பெரம்பலூரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

பெரம்பலூரிலிருந்து அரணாரை வழியாக புதுநடுவலூர் வரை செல்லும் சிற்றுந்து இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான முறையில் அரசு பேருந்து இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News December 25, 2025
பெரம்பலூர்: தீயணைப்பு நிலையங்களின் எண்கள்!

தீ விபத்துக்கள் அல்லது ஏதேனும் அவசர காலங்களில், தயக்கமின்றி தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். பெரம்பலூர் கோட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையங்களின் எண்கள்:
1.பெரம்பலூர் – 04328 224255
2.ஜெயம்கொண்டம் – 04331 250359
3.செந்துரை – 04329 242399
4.துறையூர் – 04327 222401
5.வேப்பூர் – 04328 26640
ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த அமைச்சர்கள்

கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் C.V.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உடனிருந்தனர்.
News December 25, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.


