News August 7, 2024
திமுக அமைச்சர்களுக்கு பெரும் பின்னடைவு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் தொடங்கவும், தினமும் விசாரணை நடத்தவும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது, அமைச்சர்கள் இருவருக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 20, 2026
BREAKING: தங்கம் விற்பனை மளமளவென சரிந்தது

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், நகை விற்பனை வழக்கத்தைவிட 75% சரிந்துவிட்டதாக நகைக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ₹50,000-க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு அளிக்குமாறு நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி உங்க கருத்து?
News March 20, 2026
BREAKING: LJK-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் NR காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜக 10 தொகுதிகள், அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. முதல் தேர்தலை சந்திக்கும் லட்சிய ஜனநாயக கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரங்கசாமியை தொடர்ச்சியாக IJK தலைவர் சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துவந்த நிலையில், தற்போது அக்கட்சி NDA கூட்டணியில் இணைந்துள்ளது.
News March 20, 2026
ரம்ஜான் விடுமுறை.. 3 நாள்கள் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

நாளை ரம்ஜான் விடுமுறையையொட்டி, மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. TNSTC செயலி (அ) இணையதளம் மூலம் இப்போதே டிக்கெட் புக் செய்து நெரிசலின்றி பயணம் செய்யுங்கள். SHARE IT


