News August 7, 2024
திண்டுக்கல்லில் திமுகவினர் புகழஞ்சலி

திண்டுக்கல் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பழனி எம்எல்ஏ செந்தில்குமார் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 14, 2025
வெளிநாடு வேலைவாய்ப்பு மோசடி.. மக்களே உஷார்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலை என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என எச்சரித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் குறித்து புகார் அளிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அழைக்கலாம்!
News August 13, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பி இன்று (ஆக.13) இரவு 11 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
திண்டுக்கல்: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK NOW

திண்டுக்கல் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <