News August 7, 2024
2 வாரங்களில் சவரனுக்கு ₹3,960 சரிவு

ஜூலை 22இல் ஒரு கிராம் தங்கம் ₹6,825ஆகவும், சவரன் தங்கம் விலை ₹54,600ஆகவும் இருந்தது. அதற்கடுத்த நாள், மக்களவையில் தாக்கலான பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதையடுத்து, விலை குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை கிராமுக்கு ₹495 குறைந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை 2 வாரங்களில் ₹3,960 சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாள்களில் ₹1,120 குறைந்துள்ளது.
Similar News
News December 8, 2025
இந்திய அணிக்கு 10% அபராதம் விதித்த ICC

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதில் 2-வது போட்டியில் இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், ICC அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SA இடையேயான டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் பக்தர் சுந்தர்(66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!
News December 8, 2025
தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 7.35 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.


