News August 7, 2024
Big Boss: கமல் விலக இதுதான் உண்மை காரணமா?

Big Boss கடந்த சீசனில், பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி, கமலை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இதுதான் அவர் விலக உண்மையான காரணம் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அவர் பல காரணங்களை கூறினாலும், தேர்தல் பிரச்சாரம், படப்படிப்பு என படு பிஸியாக இருந்தபோதும், அவர் நிகழ்ச்சியை நடத்தியதாக பலர் கூறிவருகின்றனர்.
Similar News
News November 4, 2025
அதிமுக, பாஜகவுடன் இணைந்தது விஜய் கட்சி

கோவை <<18183470>>கல்லூரி மாணவி கேங்க் ரேப்<<>> விவகாரத்தில் அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. கோவை பீளமேடு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தன. இந்நிலையில், தவெக சார்பிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது திமுக அரசு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News November 4, 2025
செல்போன் ரீசார்ஜ்.. இது 6 மாதம் இலவசம்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சம்மன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில், ₹1,812-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் கால் உள்ளிட்டவற்றை பெறலாம். முக்கிய அம்சமாக, இந்த திட்டத்தில் BiTV பிரிமீயம் சப்ஸ்கிரிப்சனை 6 மாதத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த ஆஃபர் நவ.18 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 4, 2025
ஒரே தொடரில் பல வரலாற்று சாதனைகள்

நடப்பு ODI WC தொடரில் தீப்தி சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். ODI WC நாக் அவுட் போட்டிகளில் அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர். ஒரு ODI WC தொடரில் 200+ ரன்கள் மற்றும் 20 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர். ஒரு ODI WC தொடரில் ஒரு போட்டியில், யுவராஜ் சிங்கிற்கு பிறகு அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார்.


