News August 7, 2024
உலக தாய்ப்பால் வாரம்: இன்றைய டிப்ஸ்

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த சத்தான உணவும் மிக முக்கியம். அதன்படி, * பாலக் கீரை, பரட்டைக் கீரை (kale), வெந்தயக் கீரை மற்றும் கடுகுக் கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன. * வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள கேரட் மற்றும் பூண்டு, வெந்தயம், பெருஞ்சீரகம், சீரகம் தாய்பால் சுரப்பை அதிகரிக்கும். * எள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன் கால்சியம் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.
Similar News
News December 13, 2025
அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.
News December 13, 2025
தமிழ் நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணம்

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்ட சீரியல் நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>>, வீட்டின் குத்தகை தொகை ₹13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். இதற்கு கணவர் சதீஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான BP மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்?

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் பெயரளவிலேயே இருப்பதாக <<18474670>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு இதுவரை ₹421.02 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், நவ.30, 2025 படி, 42% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026, அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.


