News August 7, 2024
ஹமாஸ் புதிய தலைவராக சின்வர் தேர்வு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெளி உலகிற்கு அதிகம் தெரியாவிட்டாலும், ஹமாஸ் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவராக அறியப்படும் அவர், இஸ்ரேல் மீது கடந்தாண்டு (அக்.,7) நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அண்மையில், ஈரானில் மொஸாட்டால் கொல்லப்பட்ட ஹனீயேவின் நெருங்கிய நண்பரான இவர், காசாவிலேயே தங்கி, பல ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார்.
Similar News
News March 22, 2026
சற்றுமுன்: விலகுவதாக அறிவித்தார் சரத்குமார்

பாஜகவில் தனக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்த ஆதங்கத்தை சரத்குமார் கொட்டி தீர்த்துள்ளார். தானும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறோம்; தலைமை சொன்னால் கூட தேர்தலில் நிற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அதேசமயம் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற ஒரு பட்டியலை தேசிய தலைமைக்கு நாளை கடிதமாக கொடுக்க உள்ளதாகவும், தன் கோரிக்கைக்கு செவிசாய்த்தே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
புதிய சாதனை படைத்தார் PM மோடி.. எதுலன்னு பாருங்க..

இந்தியாவில் நீண்ட காலம் அரசு பதவி வகித்தவர் என்ற சாதனையை PM மோடி படைத்துள்ளார். குஜராத் CM, இந்தியாவின் PM என மொத்தம் 8,931 நாள்கள் அரசின் தலைமை பதவியில் இருக்கும் மோடி, இந்த சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். முன்னதாக சிக்கிம் முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் 8,930 நாள்கள் பதவி வகித்து இந்த சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், அவரின் சாதனையை PM மோடி முறியடித்துள்ளார்.
News March 22, 2026
கருப்பு படத்தின் கதை முதலில் விஜய்க்கானது: RJ பாலாஜி

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘கருப்பு’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை முதலில் விஜய்யிடம் கூறப்பட்டதாக, அதன் இயக்குநர் RJ பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய்யும் ஓகே சொன்னதாகவும், ஆனால் திரைக்கதை அமைக்க காலதாமதம் ஆகிய நிலையில், அதற்குள் விஜய் அரசியலுக்குள் சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதன்பிறகே சூர்யாவுக்கு ஏற்றார்போல் திரைக்கதை மாற்றப்பட்டது என்றார்.


