News August 7, 2024
நெல்லை – செங்கோட்டை ரயில்கள் பகுதி ரத்து

செங்கோட்டை ரயில் நிலையத்தில் வருகிற 13ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அன்றைய தினம் தென்காசி செங்கோட்டை இடையே ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06685 நெல்லை – செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும். அதேபோல் வண்டி எண் 66684 செங்கோட்டை – நெல்லை ரயில் தென்காசியில் இருந்து கிளம்பும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News July 9, 2025
நாங்குநேரி டோல்கேட்டில் நாளை முதல் பேருந்து தடை

கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட மக்களின் பயணங்கள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. * மக்களே உங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிடவும்*
News July 9, 2025
ராதாபுரத்தில் 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும்

தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ராதாபுரம் கால்வாய் மூலம் விடுபட்ட 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த 15 குளங்களும் நேரடி பாசனத்திலும் சேர்க்கப்படவில்லை. குளத்துப் பாசனத்திலும் சேர்க்கப்படாததால், அப்பகுதிகள் தொடர்ந்து வறட்சியாகவே உள்ளன. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இஎஸ்ஐ பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

இஎஸ்ஐ நெல்லை துணை மண்டல அலுவலக துணை இயக்குநர் விவேக் வெளியிட்ட செய்திக்குறிப்பு, இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்த 196-வது கூட்டத்தில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 2025 ஜூலை.1 முதல் டிசம்பர்.31 வரை அமலில் இருக்கும். உரிமையாளர்கள் இஎஸ்ஐசி இணையதளம் விண்ணப்பிக்கலாம் என்றார்.