News August 7, 2024
தமிழ்புதல்வன் திட்டம் குறித்து ஆட்சியர் ஆலோசனை

தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி கலெகடர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசுகையில்; மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைத்தல், நீண்ட நாட்களாக பரிவர்த்தனை முடங்கிய கணக்குகளை புதுப்பித்தல் பற்றி ஆய்வு மேற்கொள்ள எடுத்துரைத்தார்.
Similar News
News November 5, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தருமபுர, மேட்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளர் ஜீவா, தடங்கம் மேம்பாலம் அருகே சாலையோரம் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை கழட்டிகொண்டிருந்த போது சாலையோர மின்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (நவ.03) உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
தர்மபுரியில் உயர்கல்வி சேர்வதற்கு கடன் உதவி திட்டம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம். மேலும் விவரங்களுக்கு (www.tabcedco.tngov.in இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் (டிச.04) வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


