News August 7, 2024

கொட்டுக்காளி குறித்து மனந்திறந்த அன்னா பென்

image

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் மீனா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகை அன்னா பென் அவரது வேடம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “பல அற்புதமான விஷயங்களின் வெளிப்பாடுதான் கொட்டுக்காளி. மதுரையைச் சேர்ந்த மீனா எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதே போல் வலிமையும் கொண்டிருப்பாள்” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 24, 2025

BREAKING: புதிய கட்சி தொடங்கினார்

image

யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜாராம், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் அறிவித்தார். மேலும், கட்சியின் லோகோவையும் ராஜாராம் அறிமுகம் செய்து வைத்தார். 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

News October 24, 2025

நாட்டிற்காக களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்

image

பல்வேறு நட்சத்திரங்கள் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் மைதானத்தை கடந்து, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாக மாறியுள்ளனர். அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

தீபாவளியில் ISIS தாக்குதல்: திட்டம் முறியடிப்பு

image

தீபாவளியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர். இதுதொடர்பாக 2 ISIS பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மால் மற்றும் பூங்காவில், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!