News August 7, 2024
மூலிகைகளின் ராணி தண்ணீர்விட்டான் கிழங்கு

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் தண்ணீர்விட்டான் கிழக்கிற்கு உள்ளதென சித்தர் அகத்தியரின் பாடல் கூறுகிறது. அஸ்பராகமைன், ரெஸிமோசைட் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த கிழங்கை உலர வைத்துப் பொடி செய்து தினமும் பசும்பாலில் கலந்து பருகினால் ஊட்டச்சத்து பெருகும். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரணம் குணமாகும். அத்துடன், பெண்களின் கருப்பைச் சார்ந்த நோய்கள் தீருமாம்.
Similar News
News August 20, 2025
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News August 20, 2025
புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவிநீக்கம் செய்யும் ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமாகியுள்ளது. இந்த சட்டம் குற்றம் செய்வதிலிருந்து அரசியல்வாதிகளை தடுக்க உதவும் என்கின்றனர் ஆதரிப்போர். ஆனால், குற்றம் செய்யாமல் (அ) பொய்வழக்கில் சிறைசெல்ல நேரும் அரசியல் தலைவர்களை, பதவியிழக்க செய்ய இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்றனர் எதிர்ப்போர். உங்களின் கருத்து என்ன?
News August 20, 2025
தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்

மதுரை தவெக மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி உயரக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்து<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் வடு மறைவதற்குள் ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்த நிலையில், விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.