News August 7, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு
▶குறள் எண்: 15
▶குறள்: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. ▶பொருள்: பொழியாமல் உயிர்களின் வாழ்வைக் கெடுக்கும் ஆற்றல் கொண்டது மழை. அதே மழையானது வளம் கெட்டு நொந்தவர்களுக்கு துணையாய் நின்று பொழிந்து காக்கவும் செய்யும்.
Similar News
News March 28, 2026
எங்களை மேலும் மேலும் புண்படுத்தாதீங்க…

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மட்டுமல்ல சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளது இந்த டீக்கடைக்காரரின் போஸ்டர். நெல்லை VM சத்திரத்தில் உள்ள ஒரு டீக்கடையில், ’விலையேற்றத்திற்கு நாங்கள் காரணமல்ல.. ஏற்கெனவே புண்பட்டு போயிருக்கோம்; கேள்வி கேட்டு மேலும் புண்படுத்தாதீங்க… சிலிண்டர் விலை கூடி போச்சு’ என எழுதப்பட்டுள்ளது. இன்னும் என்னலாம் நடக்க போகுதோ?
News March 28, 2026
BREAKING: தொகுதி மாறினார் செந்தில் பாலாஜி

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கில் கடந்த முறை வானதி வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை அதிமுகவின் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்களின் தொகுதிகள்!

கொளத்தூர் – ஸ்டாலின், சேப்பாக்கம் – உதயநிதி, மதுரை மத்தி – பிடிஆர், மதுரை கிழக்கு – பி.மூர்த்தி, ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி, திருமயம் – ரகுபதி, புதுக்கோட்டை – முத்துராஜா, லால்குடி – பாரிவள்ளல், திருவெறும்பூர் – அன்பில் மகேஸ், திருச்சி மேற்கு – கே.என்.நேரு, குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குன்னம் – சிவசங்கர் ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>


