News August 6, 2024

மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம்

image

கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் படகு மீது, இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மலைச்சாமி என்பவர் பலியான நிலையில், ராமச்சந்திரன் மாயமானார். கடந்த 5 நாள்களாக இந்திய கடலோர காவல்படையினர் தேடி வரும் நிலையில், அவர் இன்னும் கிடைக்கவில்லை.

Similar News

News February 22, 2026

விஜய் தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்: KAS

image

2026-ல் விஜய் தான் CM, அவர் கைகாட்டும் நபர்தான் MLA என்ற நிலை வரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாள் பற்றி பேசிய அவர், அன்றைய தினம் காலை 10 மணிக்கே விஜய் தான் TN-ஐ ஆளப்போகிறார் என்ற செய்தி வரும் எனவும் பேசியுள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் மற்ற கட்சியினர் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News February 22, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த வகையில், புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25-ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 7-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

கூட்டணியை இன்றே அறிவிக்கிறாரா ராமதாஸ்?

image

தேர்தல் நெருங்கிவிட்டது, ஆனால் இன்னமும் கூட்டணி பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார் ராமதாஸ் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமகவின் அவசர நிர்வாக குழு கூட்டம் கூடியுள்ளது. இதில், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஆலோசித்து, இன்றே ராமதாஸ் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!