News August 6, 2024

உதயநிதியை சந்தித்த குமரி இளைஞரணியினர்

image

குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெகநாதன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள், சென்னையில் இன்று (ஆக 7) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, இளைஞர் அணி சார்பில் குமரி மேற்கில் நடைபெற்ற பல்வேறு பணிகளை அவருடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, “நலத்திட்ட பணிகளை மக்களிடம் சேர்க்க இளைஞரணியினர் உழைக்க வேண்டும் என” உதயநிதி தெரிவித்தார்.

Similar News

News November 8, 2025

குமரியில் மீனவர்கள் கவலை

image

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக  அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

News November 8, 2025

குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

image

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!