News August 6, 2024
திருச்சியில் ரயில் சேவை மாற்றம்

திருவாரூர்-காரைக்கால் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சியிலிருந்து காலை 6.50 மற்றும் 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை, திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 24, 2025
திருச்சி: உதவி பேராசிரியர்கள் தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு வரும் 27-ம் தேதி, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 10 மையங்களில் நடைபெறும் இத்தேர்வினை, மாவட்டத்தில் 2624 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும் என பள்ளிக்கல்வி தேர்வு துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
திருச்சி: கோளரங்கத்தில் குளிர்கால முகாம் அறிவிப்பு

திருச்சி அண்ணா கோளரங்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான “குளிர்கால மாணவர் முகாம்” வரும் ஜன.9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வானவியல், தொலைநோக்கி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அறிவியல் வல்லுனர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர். இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பதிவு கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம் என அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
திருச்சி: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய திருச்சி மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. (<<18660267>>தொடர்ச்சி<<>>)


