News August 6, 2024
திருப்பத்தூர் ஆட்சியர் பேரில் போலி கணக்கு

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதனை தவறுதலாக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது அதனை அடுத்து புகாரின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நபர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர் புத்தக கண்காட்சி மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு

திருப்பத்தூர் புத்தகத் திருவிழா 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.புத்தக கண்காட்சியை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பதாக ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி அறிவித்துள்ளார். எனவே டிசம்பர் 8 தேதி முடிவடைய இருந்து புத்தக கண்காட்சி டிசம்பர் 9,10,11 ஆகிய மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
News December 7, 2025
திருப்பத்தூர்: 12-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா! ஆட்சியர்..

திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த மாதம் 29 தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து நாளை முடிவடைவதால் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்ற உள்ளனர். மேலும் புத்தக விற்பனைக்காக டிசம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறும் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (டிச7) அறிவித்தார்.
News December 7, 2025
திருப்பத்தூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலம் எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு-94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


