News August 6, 2024
மாறிய காட்சிகள்.. தப்பியோடிய வங்கதேச அமைச்சர் கைது

வங்கதேச கலவரத்தால் அந்நாடே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார். ஹசீனா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஐடி அமைச்சராக இருந்த ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிப்பதற்காக டாக்கா விமான நிலையத்துக்கு மாறுவேடத்தில் இன்று வந்தார். அவரை அடையாளம் கண்ட ராணுவத்தினர் ஜுனைத் அகமதை கைது செய்தனர்.
Similar News
News January 9, 2026
புயல் சின்னம்.. 13 மாவட்டங்களில் மழை அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை, அரியலூர், செங்கை, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். கவனம் மக்களே!
News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.


