News August 6, 2024

மது போதையில் கிணற்றில் விழுந்து 2 இளைஞர்கள் பலி

image

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த அஜீத் என்பவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த பிரதீப், கார்த்திக் என்ற 2 பேர் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 27, 2026

செங்கை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

செங்கை: 359 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் குடியரசு தின கிராமசபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. சித்தாமூர் ஊராட்சியில் கலெக்டர் சினேகா பங்கேற்று, மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தென்மேல்பாக்கத்தில் சமுதாயக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கபெருமாள் கோவில், பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News January 27, 2026

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட
மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் மிகவும் அசுத்தமாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர்.

error: Content is protected !!