News August 6, 2024
பினராயி விஜயனிடம் ₹1 கோடி வழங்கிய அதிமுக

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, அதிமுக சார்பில் ₹1 கோடி வழங்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ₹1 கோடிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்ததுடன் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Similar News
News January 18, 2026
அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
News January 18, 2026
தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.
News January 18, 2026
FLASH: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலாளர் அரிமா சேகர், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருடன் திமுக பிரமுகர் காரத்தே M.P.சுதர்சன், வேளச்சேரி பகுதி இலக்கிய அணிச் செயலாளர் சேகர், வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் விநாயகம் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால் மாற்றுக் கட்சியினரை இழுக்கும் பணியில் திமுக, அதிமுக போட்டி போட்டு செய்து வருகின்றன.


