News August 6, 2024
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.50000 சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு மட்டும் ஆட்களை பணியமர்த்த உள்ளது. போக்குவரத்து பொறியியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், குறைந்தபட்சம் 1-2 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் தேவை. விண்ணப்பதாரர்கள் mtc.chn@gmail.com என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம். விண்னப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 15 ஆகும்.
Similar News
News March 12, 2026
மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திருப்பம்!

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில் மன அழுத்தத்தில் அப்படி புகார் அளித்ததாக அம்மாணவி கூறியுள்ளார். மேலும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 12, 2026
சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
சென்னை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


