News August 6, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
விஜய்க்கு மகன் கொடுத்த அதிர்ச்சி

இனிஷியலை மாற்றி விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா விவாகரத்து பிரச்னை புயலை கிளப்பிவரும் நிலையில், தான் இயக்கி வரும் ‘சிக்மா’ படம் குறித்த ஃபைல்ஸில் JASON SANJAY S என்றே அவர் குறிப்பிடுவதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. அம்மா சங்கீதாவின் பெயரையே இனிஷியலாக அவர் வைத்திருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 13, 2026
ஜெ.வின் மறைவுக்கு பிறகு..

Ex CM ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் அரை டஜனுக்கு மேல் இயக்கங்கள், கட்சிகளை தொடங்கியுள்ளனர். பண்ருட்டி ராமசந்திரன், பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து சசிகலாவும் தனி இயக்கம் கண்டுள்ளார். MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் (அஇபுதமமுக) இணைந்துள்ளார். அந்த இயக்கங்கள் & கட்சிகளின் விவரங்களை SWIPE செய்து பார்க்கவும்.


