News August 6, 2024
தி.மலை மாணவி கண்டெடுத்த கற்கால கருவிகள்

தண்டராம்பட்டு அடுத்த அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவி சவுந்தர்யா நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்துள்ளார். இது 8,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும் ஆசிரியருமான ரேவதி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருவண்ணாமலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
தி.மலை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அர சால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை சிறுபான்மையினர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


