News August 6, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கடந்த ஜூன் 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. மேலும், படகு ஓட்டுநர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும் அதனை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News February 4, 2026

ராம்நாடு: பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மாசம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் இல்லை என்று சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த கடையில் பருப்பு, எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News February 4, 2026

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.2.31 கோடி காணிக்கை

image

ஸ்ரீ ராமநாத சுவாமி கோவிலில் நேற்று (பிப்.3) உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தைஅமாவசை நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கைகள் செலுத்தி இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்போது 2 கோடியே 31 லட்ச ரூபாய் காணிக்கை உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 4, 2026

ராமநாதபுரத்தில் 461 பேர் அதிரடி கைது

image

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (பிப்.3) சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க துணை தலைவர் தனலட்சுமி இதற்கு தலைமை தாங்கினார். இதில், ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 461 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.

error: Content is protected !!