News August 6, 2024

கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 3, 2026

கடலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

கடலூர் மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

கடலூர் அருகே அதிர்ச்சி: காய்கறி லாரியில் கடத்தல்…

image

சிதம்பரம் போலீசார் நேற்று (பிப்.2) பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் ஒன்றை சோதனை செய்த போலீசார், அதில் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டூவீலரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், காய்கறி லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 260 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 7 நபர்களை நேற்று கைது செய்தனர்.

News February 3, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.03) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!