News August 6, 2024
குடிபோதையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 10 வருடமாக ரகு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் டிரைவராக பணிபுரிந்து வருந்தார். கடந்த 3ஆம் தேதி கடலில் மீன்பிடித்த அவர், ரகுவிடம் பணம் வாங்கி மது அருந்திவிட்டு படகில் உறங்க சென்றுள்ளார். அப்போது, மது போதையில் கடலில் தவறி விழுந்துள்ளார். அவரது பிரேதம் இன்று கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
சென்னை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
சென்னையில் கரண்ட் கட்

சென்னையில் நாளை (பிப்.03) காலை 9 – 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டி கன்னிகாபுரம், அகஸ்தியர் தெரு, பாலாஜி அவென்யூ, வண்டிக்காரன் தெரு மற்றும் ஐடி காரிடார் டைடல் பார்க், தரமணி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் ஃபேஸ்-1, 100 அடி சாலை, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தன்சாவடியில் மின் தடை செய்யப்படும்.
News February 2, 2026
பெசன்ட் நகர் கடற்கரையில் மிளிர்ந்த ‘with Love’

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் with love படக் குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வகையிலும் அனைவரும் கவரும் வகையிலும் புதிய ட்ரென்டிங்கான ஆகாய ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தினர். மேலும் விடுமுறை நாளான நேற்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்த மக்கள் வானில் ‘with Love’ என்ற வடிவில் பறந்த ட்ரோன்கள் கண்டு வியந்தனர்.


