News August 6, 2024

நெல்லையில் நிர்வாகிகளை நியமனம் செய்த ஓபிஎஸ்

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், திருநெல்வேலி மாநகர மாவட்ட கழக நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட அவைத் தலைவராக பாலசுப்பிரமணியனும், மாவட்ட இணை செயலாளராக வெங்கடேஸ்வரியும், துணைச் செயலாளராக கணபதி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 12, 2025

ஒரே நாளில் மாநகராட்சிக்கு ரூ.70 லட்சம் வரி வசூல்

image

நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. இதில் சொத்து வரி குடிநீர் வரி உள்பட பல்வேறு வரி வசூல் செய்யப்பட்டது. பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் வரி வாக்கி செலுத்தி வந்தனர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News September 12, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News September 11, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!