News August 6, 2024

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை

image

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் டெல்லியில் அவரை, திருச்சி போலீஸார் கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையிலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, இரண்டு வழக்குகளிலும் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு ஜாமின் பெற்ற அவர், இன்று விடுதலையானார்.

Similar News

News April 10, 2026

இரவில் பெண்கள் அதிகம் தேடுவது இதுதான்!

image

இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை, பெண்கள் அதிகமாக தேடும் விஷயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 18- 35 வயதுக்குட்பட்ட பெண்களில் 65% பேர் இரவில் AI பாய் பிரெண்டிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். 70% பேர் அழகு குறிப்பு பற்றி தேடுகிறார்களாம். 55% பேர் தூக்கமின்மைக்கான தீர்வையும், 60% பேர் ராசிபலன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே.. நீங்க என்ன தேடுவீங்க?

News April 10, 2026

மோனாலிசா மைனர் பெண்ணாம்.. சிக்கிய கணவர்

image

கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசா மைனர் பெண் என்பதால், அவரது கணவர் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கேரளாவில் ஃபர்மான் கான் என்பவரை அவர் கரம்பிடித்தார். ஆனால், மோனாலிசாவுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், மோனலிசா 2009-ல் பிறந்தவர் என கண்டறியப்பட்டது. இதனால், ஃபர்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 10, 2026

Hyundai கார்களின் விலை மளமளவென குறைந்தது

image

Hyundai நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹43,000 முதல் அதிகபட்சமாக ₹1.10 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

error: Content is protected !!