News August 6, 2024

வேலூர் தொழிற்பயிற்சி நிலையம் – கால அவகாசம் நீட்டிப்பு

image

வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 20, 2026

நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

image

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கோரி 18 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.13,09,000/- மதிப்பிலான செயற்கை அவையங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.

News February 20, 2026

வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

வேலூர்: செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

வேலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையதளத்தை<<>> கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம்.

error: Content is protected !!