News August 6, 2024
தி.மலை ஆயுதப்படைக்கு புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

வேலூர் காவல் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 45 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளராக சண்முகம் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/2)

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தி.மலையில் 103 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 10th வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04175 233 381) தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17002051>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️கட்டாயம் மொழிப்பாடமாக தமிழை படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
▶️மேலும் தகவலுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 9, 2025
திருவண்ணாமலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தச்சம்பட்டு, காட்டாம்பூண்டி, பெரியகல்லபாடி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூர், வலசை, வேளையாம்பாக்கம், நவம்பட்டு, கண்டியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.