News August 6, 2024
நெல்லையில் 22 ஆண்டுக்குப் பின் கைது

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள SBI வங்கி கிளையில், ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என ஸ்ரீ சலபதி ராவ் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அன்றிலிருந்து தலைமறைவாக இருந்த சலபதிராவை, CBI போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சுத்தமல்லி பகுதி வீட்டில் சலபதிராவ் வாடகைக்கு தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, இன்று(ஆக.,6) அவரை CBI அதிகாரிகள் கைது செய்தனர்.
Similar News
News September 12, 2025
ஒரே நாளில் மாநகராட்சிக்கு ரூ.70 லட்சம் வரி வசூல்

நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது. இதில் சொத்து வரி குடிநீர் வரி உள்பட பல்வேறு வரி வசூல் செய்யப்பட்டது. பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் வரி வாக்கி செலுத்தி வந்தனர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News September 12, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 11, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.