News August 6, 2024

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரிப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 150 கன அடியும் என மொத்தம் 1,055 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Similar News

News March 11, 2026

ஈரோட்டின் பழமையான பாலத்தை இடிக்க தடை!

image

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக தொட்டி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புராதன சின்னமான நீர்வழி பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

News March 11, 2026

அறிவித்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்! GOOD NEWS

image

தமிழ்நாடு அரசு உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத்தை ₹50,000-ஆக உயர்த்தியுள்ளது; இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தகுதியுள்ள உலமாக்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்கும் முன்பே விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பகிருங்கள் யாருக்காவது பயன்படும்

News March 11, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!