News August 6, 2024
வங்கதேச பிரச்னை: இந்தியாவின் நிலைப்பாடு? (3/3)

இந்தியா பொதுவாக பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டதில்லை. ஆனால் வங்கதேச விவகாரத்தில் அந்த நிலைப்பாட்டை தொடருமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியா ஆதரவுடன் உருவான வங்கதேசத்தில் சீனா, பாகிஸ்தான் ஆதரவு அரசு அமைந்தால், அது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை அறிய, உலகமே காத்திருக்கிறது.
Similar News
News January 28, 2026
அந்தியூர் அருகே சோகம்: ஏழு மாடுகள் பலி!

அந்தியூர் அருகே காந்திநகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமிக்குச் சொந்தமான ஏழு மாடுகள், செடிகளுக்குப் பாய்ச்ச வைத்திருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்ததால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.
News January 28, 2026
விமானம் 100% பாதுகாப்பானது.. நிறுவனம் விளக்கம்

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவார்<<>> பயணித்த விமானம் 100% பாதுகாப்பானது என அவ்விமான நிறுவனமான VSR ventures விளக்கமளித்துள்ளது. விமான குழுவினரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களே என குறிப்பிட்டு, இந்த விபத்து மோசமான வானிலை மூலம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அஜித் பவாருடன் இந்த விபத்தில் விமான பைலட்கள் சுமித் கபூர் & ஷாம்பவி பதக் ஆகியோர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

தொகுதி பங்கீடு குறித்து ஒரு ரஃப் லிஸ்ட்டை திமுக போட்டுவைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் திமுகவுக்கு 164, காங்., 25, விசிக, மதிமுக, CPM, CPI, தேமுதிகவுக்கு தலா 6, ராமதாஸுக்கு 4, கொமதேக, மநீம, IUML-க்கு தலா 3, மமகவுக்கு 2 என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இம்முறையும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளே ஒதுக்கும் எண்ணத்தில் திமுக இருப்பதால் கூட்டணியில் மேலும் பிரச்னை வெடிக்கலாம் என பேசப்படுகிறது.


