News August 6, 2024
பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு..

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி வருவது, பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை பருகியதன் காரணமாக இவ்வாறு நோய் தொற்று ஏற்படலாம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால், *பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரை கொடுத்து அனுப்புங்கள். *குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
Similar News
News January 21, 2026
ராசி பலன்கள் (21.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்: CM ஸ்டாலின்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை CM ஸ்டாலின் வழங்கியுள்ளார். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கதான் செய்வார்கள் என்றும், அவர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அந்த சூழ்ச்சியில் சிக்கி பலியாகிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.


