News August 6, 2024

BREAKING கோவை மேயர் தேர்தல் தொடங்கியது

image

கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது. இந்த நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் சற்றுமுன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 கவுன்சிலர்களை கொண்ட கோவை மாநகரில் 96% இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளனர். திமுக சார்பில் ரங்கநாயகி வேட்பாளராக களத்தில் உள்ளார். 4% உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 16, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

கோவையில் நீங்களும் ஒரு பேக்கரி ஓனராகலாம்!

image

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆக.19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 16, 2025

கோவை: 10th போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே (ஆக.17) கடைசி. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!