News August 6, 2024

சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட தினம்

image

சென்னை உயர்நீதிமன்றம் 1862 ஆக. 6இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 1861இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காலனியாதிக்க நாடுகளில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இது ஏற்படுத்தப்பட்டது. 1996இல் மெட்ராஸ் பெயர், சென்னை என மாறிய போதிலும், உயர்நீதிமன்ற பெயர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றே உள்ளது. தமிழகம், புதுச்சேரி வழக்குகளை விசாரிக்கிறது.

Similar News

News February 13, 2026

எப்படி இருக்கிறது சசிகுமாரின் ‘மை லார்ட்’ Full Review & Rating

image

உயிருடன் இருக்கும் போதே, சசிகுமாரும் அவரது மனைவியும் இறந்துவிட்டதாக அரசு தரவுகளில் கூற, அதை எப்படி சசிகுமார் எதிர்த்து போராடுகிறார் என்பதே ‘மை லார்ட்’ படத்தின் கதை *பிளஸ்: சசிகுமாரும், சைத்ராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ராஜூமுருகனின் திரைக்கதை பல இடங்களில் கைதட்ட வைக்கிறது. இசை, ஒளிப்பதிவு சூப்பர். கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது *பல்ப்ஸ்: 2-ம் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது. Rating: 2.25/5.

News February 13, 2026

திமுக, அதிமுகவுக்கு விஜய் Open சவால்

image

மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என விஜய் சவால்விட்டிருக்கிறார். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடிகொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்றார். மேலும், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி, 30%-க்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவுக்கு அனுபவமில்லையா எனவும் கேட்டுள்ளார்.

News February 13, 2026

BREAKING: தேர்தல் வாக்குறுதி.. விஜய் வெளியிட்டார்

image

நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை என்றுமே வழங்க மாட்டேன் என விஜய் தெரிவித்துள்ளார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதே தனது முதல் வாக்குறுதி என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவருக்குமான அறிக்கையாக இது அமையும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, பைக், வீடு என தவெக வாக்குறுதி அளித்திருந்தது.

error: Content is protected !!