News August 6, 2024

திருச்சியில் நாளை புகழ்பெற்ற தேரோட்ட விழா

image

திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தேரோடும் வீதிகளில் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் கடைகளின் உரிமையாளர்களை அழைத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

Similar News

News February 12, 2026

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

image

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில், பொறியியல் பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது வரும் 13, 16, 18 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 12, 2026

திருச்சி: டிகிரி போதும் – வேலை ரெடி

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!