News August 6, 2024
முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு

கரூரை சேர்ந்த EX அமைச்சர் விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவரது உறவினர் ஆலை, திண்டுக்கல் அரசு ஒப்பந்த பணி அலுவலகம் உட்பட்ட 3 இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. திண்டுக்கல்லிலிருந்து பரிமாற்றம் செய்த தகவல் தெரிய வந்ததை அடுத்து, கரூர் சிபிசிஐடி, வருவாய் அதிகாரிகளுடன் திண்டுக்கல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் தனியார் அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
Similar News
News February 6, 2026
கரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட மக்கள் 04324225100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 6, 2026
கரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
கரூரில் 240 பெண்கள் அதிரடி கைது!

கரூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பினர் மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதல், காலமுறை ஊதியம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பத்மாதேவி தலைமையில் போராட்டம் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.


