News August 6, 2024

மதுரையை காக்க வந்த குட்டி ‘அழகர்’

image

மதுரை மாநகர காவல்துறையின் துப்பறியும் நாய் படை பிரிவில் வெடிகுண்டு, போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 8 நாய்கள் உள்ளன. தற்போது நி100 நாட்கள் ஆன ‘லேபர் டாக் ரெட் ரிவர்’ இனத்தைச் சேர்ந்த நாய் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பறியும் நாய்க்கு காவல் ஆணையர் லோகநாதன் ‘அழகர்’ என பெயர் சூட்டினார். மேலும் 6 மாத கால வெடிகுண்டு பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். SHARE IT.

Similar News

News March 22, 2026

போஸ்டர்களின் அட்ரஸ் இல்லை என்றால் அச்சக உரிமம் ரத்து

image

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கும் முன்பே தேர்தல் ஆணையம் தேர்தல் பணியை துவங்கி விட்டது. மதுரையில் தேர்தல் அதிகாரிகள் பல அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில் போஸ்டர் அடிக்க தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும், முகவரி கண்டிப்பாக போஸ்டர்களில் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 22, 2026

ஆசிரியர்கள் வசிக்கும் தொகுதியில் தேர்தல் பணி வழங்க எதிர்பார்ப்பு

image

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பிய மனு: சட்டப்பேரவை தேர்தலில் வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் பணியாற்ற அந்த தொகுதி வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும், அவர்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

News March 22, 2026

மதுரை: கொடியேற்றத்துடன் நாளை திருவிழா துவக்கம்!

image

அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக பிரம்மாண்ட தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும்.

error: Content is protected !!