News August 6, 2024

ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார்

image

வங்கதேச அரசியலுக்கு ஷேக் ஹசீனா மீண்டும்
திரும்பமாட்டார் என, அவரது மகன் சஜீப் வஜீத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, அவரது தலைமைக்கு எதிரான எழுச்சியால் ஹசீனா கடும் ஏமாற்றமடைந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் விளக்கமளித்துள்ளார். ஹசீனா வெளியேறியதும், அந்நாட்டு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News February 17, 2026

FLASH: சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரியும் தங்கம்!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2-வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) பெரிய அளவில்($104) குறைந்து $4,937-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $2 குறைந்து $74 -ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று(பிப்.16) சவரன் ₹960 குறைந்து ₹1,15,520-க்கு விற்பனையானது.

News February 17, 2026

கடவுளை வணங்கும் போது இப்படி நடந்து இருக்கா?

image

நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம் ➥வேண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வந்தால் வேண்டுதல் பலிக்கும் ➥குழந்தை அழும் சத்தம் கேட்டால், கடவுள் நிச்சயம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என அர்த்தம் ➥வேண்டும் பொழுது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும் ➥கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடிக்கும் சத்தம் கேட்டாலும், கடவுள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார் என அர்த்தம்.

News February 17, 2026

ஜோதிமணிக்கு ஆதரவாக குரல்கொடுத்த திமுக

image

ஜோதிமணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் <<19163049>>பேசிய பாஜக நிர்வாகி<<>> மீது கடும் நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தியுள்ளார். பொதுவாழ்வில் உள்ள பெண்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற ஆபாச தாக்குதல்களை ஒழிக்காமல், அரசியலில் மட்டுமல்ல பொதுச்சமூகமாகக் கூட பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது எனவும் கூறியுள்ளார். காங்.,-திமுக இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் நிலவும் நிலையில், கனிமொழியின் ஆதரவு கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!