News August 6, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

image

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு மொத்தம் 53 வகையான போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மொத்த பரிசு தொகை ₹37 கோடி. விருப்பம் இருந்தால் httpss//sdat.in/cmtrophy என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும், முழு தகவல்களை 95140 00777 என்ற எண்ணில் அனைத்து வேளை நாட்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News January 29, 2026

6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

image

டெல்லியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தருவதாக ஆசைக்காட்டி சிறுமியின் மறைந்த சகோதரனின் 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று நண்பர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்கள் கைதான நிலையில், 3-வது சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

News January 29, 2026

ஜனவரி 29: வரலாற்றில் இன்று

image

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.

News January 29, 2026

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

image

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.

error: Content is protected !!