News August 6, 2024

தமிழகத்தில் 423 கி.மீ. கடற்கரைகளில் மண் அரிப்பு

image

தமிழகத்தில் மொத்தமுள்ள 991.47 கி.மீ., தூர கடற்கரைகளில் 423 கி.மீ. மண் அரிப்பு (43%) ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 235.85 கி.மீ. தூர கடற்கரைப் பகுதிகள் மண் அரிப்புக்கு எதிரான மண் குவிப்புடன் உள்ளன. காலநிலை மாற்றம் & துறைமுக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட காரணங்களால், இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என, கடல் சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 16, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

image

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பலரும் கச்சா எண்ணெயில் முதலீடு செய்து வருவதால் <<19395246>>தங்கம் விலை சரிவை<<>> சந்தித்து வருகிறது. இந்நிலையில், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தங்கம் விலை 30% (சவரனுக்கு ₹35,000 வரை) சரியும் என தெரிவித்துள்ளார். SHARE IT

News March 16, 2026

தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

image

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 16, 2026

ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

error: Content is protected !!