News August 6, 2024
வங்கதேச போராட்ட பின்னணி (2/3)

போராட்டம் கலவரமாக மாறவே, 200 பேர் பலியாகினர். இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இந்நிலையில், 30% இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த வங்கதேச உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டை 5%ஆக குறைத்தது. இதனால் பதற்றம் தணிந்து, அந்நாட்டில் படிப்படியாக அமைதி திரும்பியது. அப்படியிருக்கையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி மாணவர் அமைப்புகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கின.
Similar News
News March 13, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
News March 13, 2026
CINEMA 360: வேள்பாரியில் தனுஷ்!

*ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் & விக்கி கவுசல் நடிப்பார்கள் என கூறப்படுகிறது *ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதத்திற்கு தள்ளிப்போகிறதாம் *‘கர’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது *‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்காக சம்பளம் வழங்கவில்லை என அறிவு பதிவிட, ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா என சந்தோஷ் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 13, 2026
தமிழகத்தில் தினமும் ஒரு நிர்பயா: இன்பதுரை MP

மணிப்பூரைப் போல தமிழகத்திற்கும் மத்திய அரசு நாடாளுமன்ற குழுவை அனுப்பி பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என இன்பதுரை MP வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், கடந்த 10 நாள்களில் மட்டும் 2½ வயது குழந்தை, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழகம் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


