News August 6, 2024
ஒரே வாரத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து, சென்னையில் ரவுடிகள், கொலையாளிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் 17 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2026
அதிமுகவில் இணைந்தார்.. விஜய் அதிர்ச்சி

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசார களம் அனல் நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் இணைவது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். நிலையில், அதிருப்தி நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், திமிரி கிழக்கு ஒன்றிய தவெக இணைச் செயலாளர் S.S.வெங்கடேசன், ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் S.M.சுகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். பல இடங்களிலும் சில தவெக ட்ஃப்க்
News April 3, 2026
என் மீது அவர்களுக்கு பொறாமை: ரஹானே

SRH அணியுடன் நேற்று நடந்த போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்ததால் ரஹானே மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து பேசிய அவர், 2023 முதல் தன்னிடம் சிறந்த ஸ்டிரைக் ரேட் இருப்பதாக கூறியுள்ளார். தன்னை விமர்சிப்பவர்கள் அநேகமாக தனது ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு உள்நோக்கம் இருந்திருக்கலாம் எனவும், தனது வெற்றியைக் கண்டு அவர்களுக்கு பொறாமை என்றும் பேசியுள்ளார்.
News April 3, 2026
இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுக: கனிமொழி

PTR-ஐ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை(சுந்தர்.சி) நிறுத்தி இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார். PTR-க்காக வாக்கு சேகரிக்க சென்ற அவர், திமுக கோயில் நிலங்களை மீட்டு எடுத்திருப்பதாக கூறினார். மேலும், இந்துக்களை பாதுகாப்பதாக கூறும் கட்சிகள் இதை செய்யவில்லை எனவும், இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுகதான் என்றும் பேசியுள்ளார்.


