News August 6, 2024

கீழ்பென்னாத்தூரில் நெல் விதை பண்ணை ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விதைப் பெருக்குத் திட்டத்தின் கீழ், நெல் விதை பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலரும், தி.மலை மாவட்ட கண்காணிப்பாளருமான எஸ்.மதுமதி ஆகியோர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Similar News

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/2)

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தி.மலையில் 103 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 10th வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04175 233 381) தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17002051>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️கட்டாயம் மொழிப்பாடமாக தமிழை படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
▶️மேலும் தகவலுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News July 9, 2025

திருவண்ணாமலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தச்சம்பட்டு, காட்டாம்பூண்டி, பெரியகல்லபாடி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூர், வலசை, வேளையாம்பாக்கம், நவம்பட்டு, கண்டியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!