News August 6, 2024
OLYMPICS: பதக்கப்பட்டியலில் இந்தியா 60ஆவது இடம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் இந்தியா 60ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3 வெண்கலப் பதக்கங்களுடன் நேற்று 57ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இந்நிலையில் வேறு பதக்கம் வெல்லாததையடுத்து, 3 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. 21 தங்கப்பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 20 தங்கப்பதக்கங்களுடன் அமெரிக்கா 2ஆவது இடத்திலும், 13 தங்கப்பதக்கங்களுடன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை 3, 4ஆவது இடங்களிலும் உள்ளன.
Similar News
News August 13, 2025
ஃபோனில் நிலநடுக்க அலர்ட் வரணுமா? இத ON பண்ணுங்க..

நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை உங்கள் ஃபோனில் பெற இந்த Setting-ஐ ON செய்தால் போதும்..
உங்கள் போன் Android 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருக்க வேண்டும்.
இண்டர்நெட், லொகேஷனை ON செய்யுங்கள்
போனில் உள்ள ‘Settings’க்கு செல்லுங்கள்.
அங்கு ‘Safety & Emergency’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு ‘Earthquake Alerts’ ஆப்ஷனை தேடி அதனை ON செய்து வைத்துக்கொள்ளவும்.
News August 13, 2025
இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
News August 13, 2025
பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

பயிற்சிக்கு சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கெபிராஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.