News August 6, 2024
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம்

2ஆம் உலகப்போரின்போது, ஜப்பானை பணிய வைக்க, 1945 ஆக. 6 காலை 8.15 மணிக்கு அமெரிக்க விமானப்படை USAAF B29 விமானமான `Enola Gay’, 1,800 அடி உயரத்திலிருந்து ‘Little boy’ என பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. இதில் 1.20 லட்சம் பேர் உடனடியாகவும், பல ஆயிரம் பேர் உடல்நிலை பாதித்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பலியாகினர். உலக வரலாற்றில் மனித இனத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய அத்தினமே இன்று கடைபிடிக்கப்படுகிறது.
Similar News
News January 26, 2026
ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
News January 26, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
News January 26, 2026
2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.


